ஊ.ஒ.து.பள்ளி, குருவரெட்டியூர், P.U.P.SCHOOL, GURUVAREDDIYUR, 638504.

https://pupsguruvareddiyur.blogspot.com/ இத்தளம், 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களின் இணைய வழிக்கற்றலுக்குப் (e-learning) பெரிதும் பயன்படும், இனி எங்கேயும்,எப்போதும் கற்கலாம்...

ஊ.ஒ.து.பள்ளி, குருவரெட்டியூர், P.U.P.SCHOOL, GURUVAREDDIYUR, 638504.

https://pupsguruvareddiyur.blogspot.com/ இத்தளம், 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களின் இணைய வழிக்கற்றலுக்குப் (e-learning) பெரிதும் பயன்படும், இனி எங்கேயும்,எப்போதும் கற்கலாம்...

Search

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, குருவரெட்டியூர். ( P.U.P.SCHOOL, GURUVAREDDIYUR )

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குருவரெட்டியூர்.

 

  •   பள்ளியின் பெயர்         : ஊ.ஒ.து.பள்ளி. குருவரெட்டியூர்.
  • பள்ளியின் தோற்றம்     : 26.02.1913.
பள்ளியின் சிறப்புகள்     :
  • # 18.04.2012 ல் நூற்றாண்டு விழா கண்ட பாரம்பரியமிக்க பள்ளி.
  • # மெய்நிகர் வகுப்பறை (Smart class ).
  • # காணொளி காட்சி வகுப்பறை (Video class ).
  • #  மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த வாரத்தில் இரு நாட்கள் வண்ண ஆடையுடன் ( ACTIVITY DRESS ) கட்டாயப் பயிற்சி.
  •  # 125 புரவலர்கள் மூலம் ரூ 1,25,000 வைப்புத் தொகை.
  •  # நூலகப் புரவலர்கள்.
  • # நிரந்தர விழா மேடை.
  • # தனி நூலகம்.
  • # சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( R.O. SYSTEM )
  • # கற்றல் திறனை மேம்படுத்த வகுப்பு தோறும் கணினி.
  • # தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் இலவசமாக டைரி, பயிற்சித்தாள்,  கோப்புகள்
  • #  வருடந்தோறும் ஆண்டு விழா 2004 முதல்.
  • # மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சிக்கு விழாக்களில் பரிசுகள் & பாராட்டுச் சான்றுகள் வழங்கி ஊக்குவித்தல்.
  •  #  மாணவர்களை   வருடந்தோறும் அகன்ற  அறிவிற்கு கல்வி களப்பயணம்  மற்றும்   ஆழ்ந்த  அறிவிற்கு புத்தகத்திருவிழாவிற்கு  அழைத்துச்  செல்லல்.
  •   # ஆக்கமும் ஊக்கமும் கொண்ட முன்னாள்  மாணவர்களின் மிகச்  சிறந்த பங்களிப்புகள்.
  •   # பேரிடர் காலங்களிலும் இணைய வழி  வகுப்புகள் (Online classes )  மூலம்  கற்பித்தல்.
  •  #  அன்பான, திறமையான ஆசிரியைகள்   மற்றும்  ஆசிரியர்கள்.
பள்ளி பெற்ற பரிசுகள் : 
  •  மாவட்ட அளவில் 1998 – 99 இல் சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகமாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு கல்வி அமைச்சரால் பாராட்டு பெற்றது. 
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல் சிறந்த  MCS பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது. 
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல்  செயல் வழிக் கற்றலில்  சிறந்த பள்ளியாக (Activity Based Learning ) தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது.
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல் சிறந்த கிராமக் கல்விக் குழுக்கான பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் முதல் பரிசு பெற்றது. 
  •  வட்டார அளவில் பல பரிசுகளைப் பெற்ற சிறந்த பள்ளி.
  •  மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக " காமராசர் பிறந்த நாள் விழா ”   ஊக்குவிப்பு  பரிசு ரூ 25,000 யை மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற பள்ளி.
  •   மாண்பு மிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி.கருப்பணன் அவர்களால் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில் முதல்   ” மெய்நிகர் வகுப்பறை” அமைக்கப்பட்ட, பெருமை கொண்ட பள்ளி.
  •   கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களை இஸ்ரோ (ISRO)   பெங்களூர் நடத்திய   இணைய வழி SPACESHIP MODELLING ல்   பங்கேற்று, சான்றிதழ்கள் பெறச் செய்த பள்ளி.
  • 2020 - 21 ல் டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி.

  

 



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக